மருத்துவ உதவியாளர் தேர்வு - சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு :

By செய்திப்பிரிவு

அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்பை, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இந்த தேர்வுக்காக பி.எஸ்சி. (அலைடு ஹெல்த் சயின்ஸ்) மற்றும் பி.எஸ்சி. (பிசிசியன் அசிஸ்டென்ட்) பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், விண்ணப்பவிவரங்களின்படி வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.mrb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 20 சதவீதம், பிளஸ் 2 தேர்வுக்கு 30 சதவீதம்,பட்டப் படிப்புக்கு 50 சதவீதம் என்றஅடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் 1,278 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தகுதி பெற்றுள்ளனர்.

இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண் இருப்பின் அத்தகைய விண்ணப்பதாரர்கள் வரும் 31-ம்தேதிக்குள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் முறையிடுமாறு அதன் உறுப்பினர் - செயலர் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

சினிமா

4 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்