நீதிபதிகளின் கருத்துகளை செய்தியாக்க - ஊடகங்களுக்கு தடைபோட முடியாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகள் கூறும் கருத்துகளை செய்தியாக்க ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா காலத்தில் கட்டுப்பாட்டு விதிமுறையை பின்பற்றாமல் தேர்தலை நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம்கூட சுமத்தலாம் என்றுசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வாய்மொழியாக குற்றம்சாட்டியது.

இந்த குற்றச்சாட்டை எதிர்த்தும், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவிக்கும்கருத்துகளை ஊடகங்களில்செய்தி வெளியிட தடை விதிக்க கோரியும் தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு நேற்று விசாரித்தது. நீதிபதிகள், தீர்ப்பில் கூறியதாவது:

நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைகளையும், நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவிக்கும் கருத்துகளையும் ஊடகங்கள் செய்தியாக சேகரித்து பிரசுரிப்பது பேச்சு, கருத்து உரிமையின் ஓர் அங்கமே. எனவே, ‘நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை செய்தியாக்கக் கூடாது, வெளியிடக் கூடாது’ என்று ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது. இதுதொடர்பாக அரசியல்சாசன அமைப்புகள் குறைகூறாமல், தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையம் மீதுகொலை குற்றம்கூட சுமத்தலாம்என சென்னை உயர் நீதிமன்றம்தெரிவித்த கருத்து கடுமையானதுதான். ஆனால், தமிழகத்தில் கரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம்தான் காரணம் என தீர்க்கமாக கூறவில்லை.

விசாரணையின்போது நீதிபதிகள் கருத்து தெரிவிப்பது,அந்த விவகாரத்தில் ஒரு தீர்வுஎட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உள் நோக்கம் இல்லை. இந்த வழக்கில் நீதிபதிகள் தங்கள் கருத்தை கவனத்துடன் தெரிவித்திருந்தால் இப்பிரச்சினை எழுந்திருக்காது.

அதேநேரம், நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும்தீர்ப்பில் பிரதிபலிப்பது இல்லைஎன்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். ‘கொலைக் குற்றம்கூட சுமத்தலாம்’ என நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவித்தகருத்து, தீர்ப்பில் இடம்பெறவில்லை. எனவே, இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

55 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்