சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் ஜெ. படப்பிடிப்பு தளத்துக்கு ரூ.3.50 கோடி முதல்வர் பழனிசாமி வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னையில் வரும் 18-ம் தேதிதொடங்க உள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் மற்றும் ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு 3-ம் கட்டமாக ரூ.3.50 கோடிக்கான காசோலைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க, முதல் கட்டமாக கடந்த 2019-ல் ரூ.1 கோடி, கடந்த 2020-ல் 2-ம் கட்டமாக ரூ.50 லட்சம்வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3-ம் கட்டமாக ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைக்க ரூ.3.50 கோடிக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் நேற்று வழங்கி னார்.

மேலும், சென்னையில் பிப்.18 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள 18-வது சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில்ரூ.75 லட்சத்துக்கான காசோலையை இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.தங்கராஜிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்