கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்

By செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த ஈரப்பதம் மிகுந்து கிழக்குதிசைக் காற்றின் வலு குறைந்து வருகிறது. அதனால் தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழைகுறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், மாலத்தீவு, குமரி கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக 14, 15-ம் தேதிகளில் தென்கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில்ஒருசில இடங்களில் லேசான மழைபெய்யக் கூடும். மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில்லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்டவானிலையும் நிலவக் கூடும்.

13-ம் தேதி காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் அதிகனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 28 செமீ, சேத்தியாத்தோப்பில் 21 செமீ, புவனகிரியில் 20 செமீ மழை பெய்துள்ளது.

மேலும், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 19 செமீ, மணிமுத்தாறில் 17 செமீ, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 16 செமீ, பெலந்தூரையில் 14 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்