காலாவதியான பாலிசிகளை மார்ச் 6 வரை புதுப்பிக்கலாம் எல்ஐசி நிறுவனம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள எல்ஐசி நிறுவனம் மார்ச் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பிரீமியம் செலுத்த முடியாமல் காலாவதியான பாலிசிகளை மீண்டும்புதுப்பித்துக் கொள்ள எல்ஐசி நிறுவனம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த அவகாசம் கடந்த 7-ம் தேதி தொடங்கி வரும் மார்ச் 6-ம் தேதியுடன் முடிகிறது.

5 ஆண்டு காலாவதி வரை

இதன்படி, பாலிசிதாரர்கள் தாங்கள் கடைசியாக பாலிசிக்கான பிரீமியம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் வரை காலாவதி ஆகியுள்ள பாலிசிகளை புதுப்பிக்கலாம். இதற்கு மருத்துவப் பரிசோதனை ஏதும் தேவைப்படாது.

மேலும், தாமதமாக செலுத்தப்படும் தகுதிவாய்ந்த பாலிசிகளின் பிரீமியத்துக்கான தாமதக் கட்டணத்திலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தாமத கட்டணச் சலுகை

இதன்படி, ரூ.1 லட்சம் வரையிலான பிரீமியத்துக்கான தாமதகட்டணத்தில் 20 சதவீதமும்,ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான பிரீமியத்துக்கு 25 சதவீதமும், ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள பிரீமியத்துக்கு 30 சதவீதமும் சலுகை வழங்கப்படும். டேர்ம் அஷ்யூரன்ஸ், மருத்துவம் மற்றும் அதிக ரிஸ்க் உள்ள பாலிசிகளுக்கு இச்சலுகை பொருந் தாது.

இந்த வாய்ப்பை பாலிசிதாரர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது காலாவதியான பாலிசிகளை அருகில் உள்ள எல்ஐசிஅலுவலகங்களுக்குச் சென்றுபுதுப்பித்து பலன் பெறுமாறு எல்ஐசி நிறுவனம் வெளியிட்டசெய்தியில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

22 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்