மேஷம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.ரிஷபம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். பிற்பகல் முதல் பிரச்சினைகள் விலகத் தொடங்கும்.கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். ஆன்மிகப் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள்.துலாம்: கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். தடைபட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.விருச்சிகம்: பொறுமையுடன் காரியங்களை முடிக்க முயலுங்கள். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.தனுசு: பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். வீட்டை ரசனைக்கேற்ப விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். பிற்பகல் முதல் எச்சரிக்கை தேவை.மகரம்: வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங் களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.மீனம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவுகளைப் பற்றி யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

விளையாட்டு

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்