கரோனா தடுப்பூசி மருந்துகளை 2,600 இடங்களில் சேமிக்க கட்டமைப்பு தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பூசி மருந்துகளை 2,600 இடங்களில் சேமிக்க கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

நாடு முழுவதும், கரோனா முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக,இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சோதனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “தடுப்பூசி பரிசோதனை வெற்றிகரமாக நடைபெறுகிறது. தடுப்பூசிபயன்பாட்டுக்கு வந்தவுடன் மக்களுக்கு இலவசமாக போடப்படும்.

அரசு மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தமிழக மருத்துவ பணிகள் கழகம் என மாநிலம் முழுவதும் 2,600 இடங்களில் தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகின்றன. அதில், 2 கோடி அளவிலான கரோனா தொற்று தடுப்பு மருந்துகளை உரிய பாதுகாப்புடன் சேமிக்க முடியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

13 mins ago

தமிழகம்

13 mins ago

சுற்றுலா

28 mins ago

வாழ்வியல்

29 mins ago

வாழ்வியல்

38 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

53 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்