எம்ஃபில், பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்தது யுஜிசி

By செய்திப்பிரிவு

எம்ஃபில், பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டித்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு பிஎச்டி, எம்ஃபில் போன்றஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க டிச. 31-ம்தேதி வரை கல்வி நிறுவனங்கள் அவகாசம் தரவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது.

அதையேற்று ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்பிப்பதற்கான காலஅவகாசத்தை அனைத்து பல்கலைக்கழகங்களும் நீட்டித்தன. எனினும், தொற்றின் தீவிரம் தணியாததால் பல்வேறு மாநிலங்களில் கல்லூரி திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆய்வறிக்கையை இறுதி செய்ய முடியாத நிலை உள்ளதாக யுஜிசிக்கு மாணவர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து எம்ஃபில், பிஎச்டி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தற்போதைய சூழல் கருதி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் மேலும் 6 மாதம்நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, எம்ஃபில், பிஎச்டி மாணவர்கள் ஜூன் 30-ம் தேதி வரை தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துக் கொள்ளலாம்’’ என்று கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்