2ஜி வழக்கில் ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து தொடர்ந்த சிபிஐயின் மேல்முறையீட்டு மனு விசாரணையை ஜனவரிக்கு தள்ளிவைத்தது டெல்லி நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

2ஜி வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் ஜனவரிக்கு தள்ளிவைத்துள்ளது.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி உள்ளிட்டோரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி ஓய்வு பெற்றதால், இந்த வழக்கு விசாரணை நீதிபதி யோகேஷ் கண்ணா முன்பாக நடைபெற்றது.

கோரிக்கை நிராகரிப்பு

அப்போது விசாரணை அமைப்புகளின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோனியா மாத்தூர், ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டது. அதேபோல இம்மாதத்தின் நடுவில் இந்த மேல்முறையீ்ட்டு வழக்கை தொடர்ச்சியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி யோகேஷ் கண்ணா, இந்த மாதம் விசாரணையை மேற்கொள்ள சாத்தியமில்லை என்றும்,வரும் ஜன.13 முதல் 15-ம் தேதி வரைஇந்த வழக்கு தொடர்ச்சியாக விசாரிக்கப்படும். அன்றைய தினம்சிபிஐ தனது வாதத்தை முன்வைக்கலாம் எனக் கூறி விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

ஜன.13 முதல் 15-ம் தேதி வரை இந்த வழக்கு தொடர்ச்சியாக விசாரிக் கப்படும். அன்றைய தினம் சிபிஐ தனது வாதத்தை முன்வைக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

40 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்