மாற்றுத் திறனாளிகளுக்காக நவீன சக்கர நாற்காலிகள் ஐஐடி இளம் தொழில்முனைவோர் உருவாக்கினர்

By செய்திப்பிரிவு

மாற்றுத் திறனாளிகள் எளிதாகபயன்படுத்தும் வகையில் சென்னை ஐஐடி இளம் தொழில்முனைவோர், பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன சக்கர நாற்காலிகளை உருவாக்கியுள்ளனர்.

சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் அண்மைக் காலமாக படித்துமுடித்ததும் வேலையில் சேருவதை விரும்பாமல் புதுமையான தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) தொடங்குவதில் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் ஐஐடி மாணவரால் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நியோ மோஷன் நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் நவீன சக்கர நாற்காலிகளை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே சக்கர நாற்காலிகளை பயன்படுத்தி வரும் மாற்றுத் திறனாளிகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் விருப்பங்களை அறிந்து இந்த புதுமையான சக்கர நாற்காலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வரப்பிரசாதம்

நியோ-பிளை, நியோ போல்ட்என்ற அந்த இரு சக்கர நாற்காலிகளும் மோட்டாரில் இயங்கக்கூடியவை. வசதியாக அமர்ந்துகொண்டு பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்மோட்டார் சக்கர நாற்காலிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

உலகம்

11 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

4 hours ago

வணிகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்