கடலோர மாவட்டங்களில் தங்கியிருக்க மாநில பேரிடர் மீட்பு குழுவினருக்கு உத்தரவு புயல் கண்காணிப்பு, மீட்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புயல் கண்காணிப்பு மற்றும் மீட்புப்பணிக்காக கடலோர மாவட்டங்களில் இன்னும் 5 நாட்கள் தங்கியிருக்கும்படி மாநில பேரிடர் மீட்புக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘நிவர் புயல் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகளை நியமித்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டிருந்தார். தற்போது புதிய புயல் உருவாகி நாளை முதல் 4-ம் தேதி வரை மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த மீட்பு பணிக்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து செயல்படுவார்கள் என டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

புயல் மற்றும் மழை தொடர்பான அவசர உதவிக்கு காவல் துறையினரை தொடர்பு கொள்ள அந்தந்தமாவட்டத்துக்கென தனித்தனி தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பொதுவான எண்ணாக 1077 என்ற இலவச அழைப்பு எண்ணும், 044-24343662, 044-24331074 என்றஎண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மாநில பேரிடர் மீட்பு குழுவைகண்காணிக்கும் பணி ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயலால் தமிழககடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இதனால் இந்த பகுதிகளில் மீட்பு பணிகளை முதலில் செய்ய மாநில பேரிடர் மீட்பு குழுவினருக்கு ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மாநில மீட்பு குழுவினர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர். அடுத்த புயல் வருவதை தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து அதே இடங்களில் தங்கி பணிகளை மேற்கொள்ள ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும்நீர்நிலை பகுதிகள் அருகே தங்கியிருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

44 mins ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்