பேரறிவாளனுக்கு பரோல் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திகொலை வழக்கில் 29 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘பேரறிவாளனுக்கு ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டியுள்ளதால் பரோலை நீட்டித்து அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து நீதிபதிகள், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்தும், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

அற்புதம்மாள் கோரிக்கை

இதற்கிடையே, ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தில் இன்று (நேற்று) பேரறிவாளனின் வழக்குவிசாரணைக்கு வந்தபோது, விடுதலையை நான் எதிர்பார்த்தேன். ஆனால், ஒரு வாரம் பரோல் மட்டுமே கிடைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனது மகன் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எனக்குஉறுதியளித்தார். அவரது வழியில்ஆட்சி செய்யும் முதல்வர் பழனிசாமி, எனது மகன் விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்