வண்டலூர் வட்டத்தில் உள்ள தாழம்பூரில் 150 ஏக்கர் அனாதீன நில பட்டா ரத்து முறைகேட்டுக்கு உதவிய 3 அதிகாரிகள் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் உள்ள தாழம்பூர்கிராமத்தில், 570 ஏக்கர் அனாதீனநிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு வருவாய்த் துறையினர் சிலர் முறைகேடாக பட்டா வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

முன்னாள் ராணுவ வீரர் ராஜாஎன்பவர் அரசு சார்பில் தனக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கு, வேறு ஒருவர்பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம், குழு ஒன்று அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.

பல பெயர்களில் பட்டா

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், தாழம்பூரில் உள்ள அனாதீன 570 ஏக்கர் நிலத்தில், 250 ஏக்கர் நிலத்துக்கு பெருமாள்சாமி என்பவருக்கு அரசு விதிமுறைப்படி பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும்170 ஏக்கர் அனாதீன நிலத்தில் அரசு ஆவணங்களில் திருத்தம் செய்யப்படவில்லை. மீதி உள்ள 150ஏக்கர் நிலங்களுக்கு பல பெயர்களில் பட்டா வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவுப்படி 150 ஏக்கர் நிலத்துக்கான பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்ட நிலச்சீர்திருத்த முன்னாள் இணை ஆணையர் பாலசுப்பிரமணியம், உதவி ஆணையர் பழனியம்மாள், முன்னாள் செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்து வடிவேல் ஆகியோர் மீது, காஞ்சிபுரம் நில அபகரிப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாலசுப்பிரமணியம் பணி நிறைவுபெற்று இறந்துவிட்டார். பழனியம்மாள், முத்து வடிவேலு ஆகியோர் டிஆர்ஓவாகப் பதவி வகித்து வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ‘‘வண்டலூர் வட்டம், தாழம்பூர் கிராமத்தில் 150 ஏக்கர் நிலத்துக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்த நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடுக்கு உதவியாக இருந்த 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை நடைபெறும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

1 min ago

வாழ்வியல்

42 mins ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்