எஸ்ஏசி தொடங்கிய கட்சியின் தலைவர் பத்மநாபன் ராஜினாமா

By செய்திப்பிரிவு

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து பத்மநாபன் ராஜினாமா செய்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் சமீபத்தில் அரசியல் கட்சியை பதிவு செய்தார். அதற்கு நிர்வாகிகளையும் நியமித்தார். இதைத் தொடர்ந்து விஜய், ‘‘எனக்கும் அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக் கூடாது’’ என்றுஉடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எஸ்ஏசி தொடங்கிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக எஸ்ஏசிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும், அனைத்து விதங்களிலும் கட்சியின் எதிர்காலத்தை மனதில் வைத்தும் தலைவர் பதவியில் இருந்து நானே விலகுகிறேன். ஒரு சாதாரண உறுப்பினராக நமது கட்சிக்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ராஜினாமா செய்திருப்பது எஸ்ஏசிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பத்மநாபன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சுற்றுச்சூழல்

19 mins ago

விளையாட்டு

28 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

51 mins ago

கல்வி

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்