இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 முதல் 7 மணி, இரவு 7 முதல் 8 மணி என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு காரணமாக சிறு குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

காலை 6-7, இரவு 7-8 மணி வரை

பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரிஉச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்அடிப்படையில், கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணிமுதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசுஅனுமதி வழங்கியது. அதேபோல, இந்த தீபாவளிநாளிலும் மேற்கூறிய 2 மணி நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள், குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் தன்மைகொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்க, அந்தந்த பகுதி நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய, அதிக ஒலிஎழுப்பும் வெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்