மின்சார வாகனம் வாங்குவோருக்கு 2022 டிசம்பர் வரை 100 சதவீதம் வரி சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மின்சார வாகனங்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத வரிச் சலுகை வரும் 2022 டிசம்பர் மாதம் வரை 100 சதவீதமாக அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து மாற்று எரிசக்தி மூலம் வாகனங்களை இயக்குவதற்கான புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வகுத்து வருகின்றன.

இதற்கிடையே, தமிழகத்தில் இதுவரை மின்சாரத்தில் (பேட்டரி தொழில்நுட்பம்) இயங்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு 50 சதவீத வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 2022வரை 100 சதவீதம் வரி விலக்குஅளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எரிபொருளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், மின்சார வாகனங்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு முதல் 50 சதவீத வரிச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த வரிச் சலுகையானது 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் வரை இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகையால் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்’’ என்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் சிலர் கூறும்போது, ‘‘தேசிய மின் போக்குவரத்துதிட்டத்தின்படி அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு கோடி மின்சார வாகனங்களை இயக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை மத்திய, மாநில அரசுகள் தனியார்நிறுவனங்களுடன் இணைந்து ஏற்படுத்தி வருகின்றன.

நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் போன்ற வாய்ப்புள்ளஇடங்களில் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட உள்ளன. எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் தற்போதுள்ள வாகனங்களில் 40 சதவீதவாகனங்கள், மின்சார வாகனங்களாக மாற வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்