கேரளாவில் தடுப்பூசி போடாதவர்களுக்குஇலவச கரோனா சிகிச்சை இல்லை : முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு இலவசகரோனா சிகிச்சை வழங்குவதில்லை என கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்தவரும் போதிலும் தினசரி புதிய நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் கேரளாவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் சுமார் 5,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பள்ளிகளுக்கு செல்வதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கேரளாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில்தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு இலவச கரோனா சிகிச்சை அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கான சிகிச்சை செலவை அரசு ஏற்காது. உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அதற்கான அரசு மருத்துவரின் சான்றிதழை அளித்தால் மட்டுமே இலவச கரோனா சிகிச்சை பெற முடியும்.

உடல்நலக்குறைவு மற்றும் ஒவ்வாமை காரணமாக இரண்டுதடுப்பூசிகளும் எடுத்துக்கொள்ளாத கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் சேர மருத்துவரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இவர்கள் பணிக்குச் செல்ல ஒவ்வொரு வாரமும் ஆர்டி-பிசிஆர் சோதனையில் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்தஉத்தரவு அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்” என்று கூறப்பட்டுள்ளது.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்