அமெரிக்க விமான பயணத்தின்போது கோப்புகளை பார்த்த பிரதமர் மோடி : சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரல்

By செய்திப்பிரிவு

அமெரிக்க விமான பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடிசில கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்துடன், “நீண்ட தூர விமானப் பயணமானது, சிலகோப்புகள் மற்றும் ஆவணங்களை படிப்பதற்கான வாய்ப்பாக அமைகிறது” என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவை பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷணவ், “நாட்டுக்காக எப்போதும் அயராது சேவை புரிகிறார் பிரதமர்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுபோல, பிரதமர் மோடியின் இந்தப் படத்துடன், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி விமானத்தில் கோப்புகளை பார்த்தபோது எடுத்த படத்தையும் பாஜக மூத்த தலைவர் கபில் மிஸ்ரா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படங்களையும் பிரதமர் மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவரை பிரதமர் மோடி இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசுகிறார். அங்கு மோடிக்கு பைடன் விருந்து அளிக்கிறார்.

பின்னர், இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மோடி, நாளை ஐ.நா. பொதுச் சபையிலும் உரையாற்ற உள்ளார்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்