கடன் உத்தரவாத திட்டம் மூலம் 3 மாதத்தில் - ரூ.2.7 லட்சம் கோடி கடனுதவி :

By செய்திப்பிரிவு

கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. அவற்றுக்கு புத்துயிரூட்டும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்தது. அதில் ஒன்றுதான் கடன் உத்தரவாத (சிஜிஎஸ்) திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டின் (2021-22) முதல்காலாண்டில் 53,86,739 கடன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வகையில் வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,72,007 கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தில் கடன்பெறுவதற்கு எவ்வித பிணையும்நிறுவனங்கள் தரத் தேவையில்லை. இதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளன. இதில் வங்கிகள் மூலம் ரூ.6,693 கோடியும், நிதிநிறுவனங்கள் மூலம் ரூ.6,603கோடியும் கடனாக வழங்கப்பட் டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் வழங்கப்பட்ட கடன் அளவுக்கு இணையாக இப்போதும் வழங்கப்பட்டுள் ளதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்