மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியம் : என்சிபி தலைவர் சரத் பவார், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து

By செய்திப்பிரிவு

நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியம் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவர் வெளியிட்ட அறிக்கை:

மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து மக்களிடம் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியம். மேலும், நாட்டின் மொத்த வருவாய், ஆரோக்கியமான வாழ்க்கைத்தரம், சமச்சீரான சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்தவும் மக்கள் தொகை கட்டுக்குள் இருக்க வேண்டும். உலக மக்கள் தொகை தினத்தில் ஒவ்வொரு பொறுப்புள்ள குடிமகனும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பங்களிப்பதற்கு உறுதியேற்க வேண்டும்.இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட செய்தியில், ‘‘சமத்துவமின்மை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணமாக உள்ளது. மக்கள் தொகைபெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள்குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். முன்னேறிய சமுதாயம் அமைய மக்கள் தொகையை கட்டுப்படுத்த மக்கள் உறுதியேற்க வேண்டும்’’ என்றுதெரிவித்துள்ளார்.

உ.பி.யில் மக்கள் தொகை கட்டுப் பாடு வரைவு மசோதாவை மாநில சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு அரசின் பல்வறு சலுகைகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்