பிலிப்பைன்ஸ் விமானப் படை விமானம் தரையிறங்கும் போது - விபத்தில் சிக்கி 42 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் சுமார் 11 கோடிமக்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். 5 சதவீதம் பேர் முஸ்லிம்கள். பிலிப்பைன்ஸின் சுலு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்றனர். அப்பகுதியில் சில தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன.

சுலு பகுதியில் நாச வேலை களில் ஈடுபடும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக போரிட வில்லாமோர் விமானப் படைத் தளத்தில் இருந்து சி-130 ரக விமானத்தில் நேற்று ராணுவ வீரர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அவர்களின் விமானம் லூம்பியா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையை விட்டு விலகியது. கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்கிருந்த கட்டுமானங்களின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 42 ராணுவ வீரர்கள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர். 34 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 17 பேரை காணவில்லை.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியபோது, ‘‘விமானப் படையின் சி-130 ரக விமானத்தில் 3 விமானிகள் உட்பட 96 பேர்இருந்தனர். விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்துவிலகி தீப்பிடித்து எரிந்தது. 3 விமானிகளும் உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பலத்த காயமடைந்திருப்பதால் இப்போதைக்கு அவர்களிடம் விவரங்களை கேட்டறிய முடியாது. எவ்வாறு விபத்து நேரிட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்