அமர்நாத் யாத்திரை 2-ம் ஆண்டாக ரத்து :

By செய்திப்பிரிவு

காஷ்மீர் மலைப்பகுதியில் அமர்நாத் குகை கோயில் உள்ளது. அங்கு இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் ஜூலை-ஆகஸ்ட் மாதங் களில் பக்தர்களை அனுமதிப்பது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீர் துணைநிலை ஆளுநரும் அமர்நாத் கோயில் வாரிய தலைவருமான மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பரவலை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி அமர்நாத் யாத் திரையை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல குகை கோயிலில் இரு வேளையும் ஆரத்தி நடைபெறும். இது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்