தேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று காங். அல்லாத எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் :

By செய்திப்பிரிவு

தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று கூட்டியுள்ளார்.

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள மூன்றாவது அணிஅமைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சரத் பவார் இன்று கூட்டியுள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாத் கிஷோர் கடந்த 11--ம் தேதி மும்பையில் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது 3-வது அணிஅமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களில் 2-வது முறையாக டெல்லியில் சரத் பவாரை பிரசாந்த் கிஷோர் நேற்று சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவது, பிரதமர் மோடிக்கு எதிராக வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரி கிறது.

இந்த சந்திப்புக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட் டம் பற்றிய சரத் பவாரின் அறி விப்பு வெளியானது. சமீபத்தில்நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பிரசாந்த் கிஷோர்தான் வியூகம் வகுத்துக் கொடுத்தார்.

இந்தத் தேர்தலில் திரிணமூல் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வரானார். எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியின் பெயர் பரிசீலிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி ஏற்கெனவே மம்தாவிடம் கேட்டதற்கு, ‘‘2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

பல்வேறு எதிர்க்கட்சிகளும் 3-வது அணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அவசியம் என்றும் இது தொடர்பாக சரத் பவாருடன் பேசியுள்ளதாகவும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில்பொதுவான பிரதமர் வேட்பாளர் குறித்தும் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

34 mins ago

உலகம்

48 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்