கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட - தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார் :

By செய்திப்பிரிவு

‘பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கப்பட்ட தடகள ஜாம்பவான் மில்கா சிங் (91), ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கம் மற்றும் காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் ஆவார். அவரது சாதனைகளை பாராட்டி மத்திய அரசு பத்ம  விருதை வழங்கியிருந்தது.

மில்கா சிங்குக்கு கடந்த மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், அதன் பின்னர் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஜூன் 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த புதன்கிழமை கரோனாவில் இருந்து மீண்ட அவர், பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மில்காசிங் உயிரிழந்தார். அவரது மனைவி நிர்மல் (85), கரோனா தொற்றால் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மில்கா சிங்கிற்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். மில்கா சிங்கின் உடல் நேற்று மாலை 5 மணி அளவில் அரசு மரி யாதையுடன் சண்டிகரில் தகனம் செய்யப்பட்டது.

மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்