மாவோயிஸ்ட் தாக்குதல் என்ஐஏ விசாரணை தொடங்கியது :

By செய்திப்பிரிவு

சட்டீஸ்கரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் 22 வீரர்கள் இறந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) விசாரணையை தொடங்கியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் தெகுல்குடியம் என்ற கிராமம் அருகே மாவோயிஸ்ட்களும் அதன் தலைவர்களும் கூடியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை கடந்த ஏப்ரல் 3-ம் தேதியன்று சுற்றிவளைத்து மாவோயிஸ்ட்கள் சரமாரியாக சுட்டதில் 22 வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 16 ஆண்டுகளில் இதுபோன்ற தாக்குதல் நடந்தது இல்லை என்ற நிலையில், இதன் பின்னணி குறித்து விசாரிக்கவும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் இந்த விசாரணை என்ஐஏ.வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. சட்டீஸ்கர் மாநில போலீஸாரிடம் இருந்து தாக்குதல் சம்பவம் தொடர்பான ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் இம்மாத ஆரம்பத்தில் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணையை என்ஐஏ தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹிம்டா,நபலா கேசவ் ராவ் உள்ளிட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் உட்பட 400 மாவோயிஸ்ட்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ பதிவு செய்து விசாரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 mins ago

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்