தேங்கிய மழைநீரை அகற்ற தவறிய ஒப்பந்ததாரர் மீது குப்பையை கொட்டிய சிவசேனா எம்எல்ஏ :

By செய்திப்பிரிவு

மும்பையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் பகுதியை சுத்தம் செய்யாததே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஒரு வீடியோ சமூக வலைதளங் களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், வடக்கு மும்பை பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள ஒரு சாலையில், கண்டிவலி தொகுதி சிவசேனா எம்எல்ஏ திலிப் லாண்டே ஒப்பந்ததாரர் ஒருவரிடம் உட்காருமாறு கூறுகிறார். உட்கார்ந்த ஒப்பந்ததாரரை நோக்கி சென்ற ஒருவர் அவரை தள்ளுகிறார். பின்னர் திலிப் உத்தரவுப்படி, அவரது ஆதரவாளர்கள் இருவர் ஒப்பந்ததாரர் மீது குப்பையை கொட்டுகின்றனர்.

இதுகுறித்து திலிப் லாண்டே வெளியிட்ட அறிக்கையில், “சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்கான ஒப்பந்தப் பணியைப் பெற்றவர் அந்தப் பணியை சரியாக செய்யவில்லை. ஆனால் இப்பகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆகவே எங்கள் கட்சியின் உள்ளூர் நிர்வாகி மற்றும் தொண்டர்களுடன் இணைந்து தேங்கிய மழை நீரை அகற்றினோம். அதேநேரம் தனது பணியை செய்யாத ஒப்பந்ததாரரை வரவழைத்து அவரை கண்டித்தோம்” என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்