இதுவரை 22 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இதுவரை 22.1 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கடந்த ஏப்ரலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது.

மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி, ஒரே நாளில் 24,26,265 பேருக்கும் இதுவரை 22,10,43,693 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்களில் 99,12,522 பேருக்கு முதல் தவணையும் 68,15,468 பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களில் 1,58,49,178 பேருக்கு முதல் தவணையும் 85,84,162 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 5,94,06,566 பேருக்கு முதல் தவணையும் 1,89,46,097 பேருக்கு இரண்டாம் தவணைதடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது. 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 6,78,84,028 பேருக்கு முதல் தவணையும், 1,09,73,523 பேருக்கு 2-ம் தவணையும் போடப்பட்டிருக்கிறது.

18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 2,26,12,866 பேருக்கு முதல் தவணையும் 59,283 பேருக்கு 2-ம் தவணைதடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 17.56 கோடி பேருக்கு முதல் தவணையும் 4.53 கோடி பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடமத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்