26-ல் கருப்பு தின போராட்டம் கர்னாலில் இருந்து தொடங்க விவசாயிகள் முடிவு :

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் கருப்பு தின போராட்டத்தை ஹரியாணாவின் கர்னால் நகரில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லி எல்லையில் விவசாயிகள் அமைப்பினர் போராட்டத்தைத் தொடங்கினர். வரும் 26-ம் தேதியுடன் இந்த தொடர் போராட்டம் 6 மாதத்தை நிறைவு செய்யவுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

மே 26-ம் தேதி தினமானது, பிரதமராக மோடி பதவியேற்று 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் தேதியாக அமையவுள்ளது. எனவே அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்தோம் என்று விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் போராட்டத்தை ஹரியாணாவின் கர்னாலில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளனர்.

இந்த கர்னால் நகரம் டெல்லி எல்லையான சிங்கு பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பாரத் கிசான் யூனியன் (பிகேயூ) தலைவர் குர்னாம் சிங் சருனி தலைமை ஏற்கவுள்ளார். கர்னால் பகுதியில் பஸ்தாடா சுங்கச்சாவடியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் விவசாயிகள் புறப்பட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து குர்னா சிங் கூறும்போது, “நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். டெல்லியின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்” என்றார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 secs ago

தமிழகம்

20 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

40 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்