கரோனா பெருந்தொற்று முடிவடைய நீண்ட காலமாகும் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் சற்றுகுறைந்திருந்த நிலையில், கடந்தமூன்று வாரங்களாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்,ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியது:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் மட்டும்போதுமானது கிடையாது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், சோதனையை அதிகப்படுத்துதல், தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வைரஸ் தடுப்பு விதிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கண்டிப்புடன் கடைப்பிடித்தால் மட்டுமே பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியம்.

வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கரோனா வைரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தப் பெருந்தொற்று முடிவடைய இன்னும் நீண்டகாலம் ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

58 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்