இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் போர்ப்ஸ் வெளியீடு - தொடர்ந்து முதலிடத்தில் முகேஷ் அம்பானி :

By செய்திப்பிரிவு

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். ஆசியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8,450 கோடி டாலராகும்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 10-வதுஇடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி இரண்டாவது இடத்திலும், ஷிவ் நாடார் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

கரோனா பரவல் காலத்திலும் அம்பானி 3,500 கோடி டாலர் நிதிதிரட்டியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது. இவரது குழும நிறுவனங்களில் ஒன்றான ஜியோவில் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2021-ம் ஆண்டு இறுதிக்குள் நிறுவனத்தை கடன் சுமை இல்லாத நிறுவனமாக மாற்ற முகேஷ் அம்பானி இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள், அவர்களது சொத்து விவரம் வருமாறு:

முகேஷ் அம்பானி (8,450 கோடி டாலர்), கவுதம் அதானி (5,005 கோடி டாலர்), ஷிவ் நாடார் (2,350 கோடி டாலர்), ஆர் கே தமானி (1,650 கோடி டாலர்), உதய் கோடக் (1,590 கோடி டாலர்), லட்சுமி மிட்டல் (1,490 கோடி டாலர்), குமார் மங்களம் பிர்லா (1,280 கோடி டாலர்), சைரஸ் பூனாவாலா (1,270 கோடி டாலர்), திலிப் சாங்வி (1,009 கோடிடாலர்), சுநீல் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் (1,005 கோடி டாலர்).

கரோனா காலத்தில் கவுதம்அதானியின் சொத்து மதிப்பு 4,200 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

37 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்