இந்தியாவில் உற்பத்தியை தொடங்குகிறது அமேசான்

By செய்திப்பிரிவு

‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு உந்துதல் அளிக்கும் வகையில் அமேசான் நிறுவனம், அதன் மின்னணு சாதனங்களை இந்தியாவிலே தயாரிக்க இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று தெரிவித்தார்.

டிவியில் ஸ்ட்ரீமிங் வசதியைத் தரும் ‘ஃபையர் டிவி ஸ்டிக்’ என்ற சாதனம் அமேசான் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும்பிரபலமானது. இந்த சாதனத்தை அமேசான் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உள்ளது.

இதற்கென சென்னையில் உள்ள ‘ஃபாக்ஸ்கான்’ நிறுவனத்தின் துணை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் தயாரிப்புத் தொடங்கும் என்றும் இந்திய வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான ‘ஃபையர் டிவி ஸ்டிக்’ தயாரிக்கப்படும் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே அமேசான் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் முதல் தயாரிப்பு ஆகும்.

சென்னையில் உற்பத்திப் பிரிவு அமைக்கப்படுவதை வரவேற்றுள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அமேசானின்இந்தத் திட்டத்தால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று கூறினார்.

இந்தியாவில் உள்ள 1 கோடி சிறு, நடுத்தர தொழில்களை இணையவழித் தொழிலாக மாற்றஅமேசான் நிறுவனம் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சென்ற வருடம் உறுதி அளித்தது.

அதன்மூலம் 10 பில்லியன்டாலர் ஏற்றுமதிக்கான வாய்ப்புஅமையும். மேலும், 2025-க்குள்கூடுதல 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்