சீனாவின் ஆய்வகத்திலிருந்து கரோனா பரவவில்லை உலக சுகாதார அமைப்பின்ஆய்வு முடிவை ஏற்க அமெரிக்கா மறுப்பு

By செய்திப்பிரிவு

சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்தோ, சீனாவில் உள்ள விலங்குகளின் மூலமாகவோ கரோனா வைரஸ் பரவல் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதை அமெரிக்க அரசு ஏற்க மறுத்துள்ளது.

உலகில் முதன் முதலாக 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்துபிற நாடுகளுக்கும் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவத்தொடங்கியது. சீனாவின் வூஹான்நகரில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. அதேபோல் சீனாவில் உள்ளவவ்வால்களில் இருந்து கரோனாவைரஸ் பரவியதாகக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் சீனாவில்ஆய்வு மேற்கொண்டது. அந்தஆய்வு முடிவு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்டது. அதில், வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா பரவியதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை என்றும், சீனாவில் உள்ள விலங்குகளின் வழியாகவும் கரோனா பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இந்த ஆய்வு முடிவை அமெரிக்க அரசு ஏற்க மறுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வு முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கரோனா பரவல் தொடர்பானஆய்வில் நாங்கள் எதிர்பார்த்த அளவில் சீன அரசு வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இதுவரையில் கரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் 23.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 4.75 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

48 mins ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்