திரையரங்குகளில் இன்று முதல் 100% அனுமதி

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச்மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் படிப்படியான தளர்வுகளுடன் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல் பட அனுமதிக்கப்பட்டது.

தற்போது திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் முழு அளவில் செயல்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 27-ம் தேதிஉத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பான நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில், திரைப்படங்களைதிரையிடுவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, திரையரங்குக்கு வெளியே, பொது இடங்கள், காத்திருப்பு பகுதிகளில் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பொதுவான வழிகாட்டு தல்களை பின்பற்றப்பட வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கு இடையேயும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

க்ரைம்

31 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்