87 ஆண்டுகளில் முதல் முறையாகரஞ்சிக் கோப்பை போட்டிகள் ரத்து

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட்டில் 87 ஆண்டுகளில் முதல் முறையாக, ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டுநடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையுடன், 19 வயதுக்குட்பட்ட வினு மன்கட் கோப்பைப் போட்டியும்,மகளிர் சீனியருக்கான ஒருநாள் போட்டியும் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும். ஆனால், ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என அனைத்து கிரிக்கெட் சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஞ்சிக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை தயார் செய்வது கடினமாக இருக்கிறது. ஏற்கெனவே நாம் ஏராளமான நாட்களை இழந்துவிட்டோம். இனிமேல்உள்ளூர் போட்டிக்கான அட்டவணையை தயார் செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக விளையாடுவது அவசியம். ஆனால், அது கடினமான செயல். ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் விளையாடாமல் ஊதியத்தை இழந்த வீரர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பையை வெற்றிகரமாக நடத்திய அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழு வீச்சில் வேகமாகத் தயாராகி வருகிறோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிசென்னை – ஹைதராபாத்

நேரம்: மாலை 5.00ஏடிகே மோகன் பகான் - கேரளா

நேரம்: இரவு 7.30

இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்