மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் குடியரசுத் தலைவர், பிரதமர் அமைச்சர்கள் அஞ்சலி

By செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் நேற்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராஜ்காட்டில் காந்தியின் விருப்பமான பஜனை பாடலான ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது.

முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் அனைவரும் மகாத்மா காந்தியின் அகிம்சை, அமைதி, எளிமை, தூய்மை, பணிவு ஆகியவற்றை தங்களது வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதி, அகிம்சை, தன்னலமற்ற சேவை போன்ற கொள்கைளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் காந்தி. அவரது வார்த்தைகள், செயல்களின் மூலம் காலத்தால் அழியாத முத்திரையை அவர் பதித்துவிட்டுச் சென்றார்.

உலகெங்கிலும் எண்ணற்ற மக்களை அகிம்சையின் பாதையை பின்பற்ற அவர் ஊக்கப்படுத்தினார்” என்றார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர்பக்கத்தில் கூறும்போது, “லட்சக்கணக்கான மக்களை அகிம்சை, அமைதி, தன்னலமில்லாத சேவை தனது கொள்கைகள் மூலம் நல்வாழ்வுவுக்குத் திருப்பியவர் காந்தி. அவரது நினைவு நாளில்அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சுதந்திரத்துக்காக உயிர்நீத்த ஏராளமான மக்களின் தியாகத்தை காந்தி நினைவு நாளில் நினைவுகூர்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சினிமா

7 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

44 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்