வணிக ரீதியாக தடுப்பு மருந்து ஏற்றுமதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

இங்கிலாந்தை சேர்ந்த தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தை இந்தியாவிலுள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த தடுப்பு மருந்தை உள்நாட்டு பயன்பாட்டுக்கும், அண்டை நாடுகளான பூடான், மாலத்தீவுகள், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகியவற்றுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகப்படுத்தியதன் மூலம் கரோனா பேரழிவை எதிர்கொள்ள வணிக ரீதியில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏற்கெனவே பல நாடுகளில் இருந்து கரோனா தடுப்பு மருந்துக்கான ஆர்டர்கள் பெறப்பட்ட நிலையில் முதல் கட்டமாக பிரேசில் மற்றும் மொராக்கோவுக்கு ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது என வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிருங்லா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, சவுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் கூறினார்.

அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கரோனா உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள பிரேசில் சீரம் நிறுவனத்திடம் 20 லட்சம் தடுப்பு மருந்து குப்பிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்