விவசாயிகள் போராட்டத்தை தூண்டும் மாவோயிஸ்ட்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் புகார்

By செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருன்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு இருக்கும் சந்தேகங்கள், கவலைகளை போக்குவதற்கு அரசு தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார். மேலும் விவசாயிகள் சொல்லும் திருத்தங்களையும் நாங்கள் செய்யத் தயாராகவே உள்ளோம்.

இந்தப் போராட்டத்தில் இடதுசாரிகள், மாவோயிஸ்ட்களின் பின்னணி இருக்கிறது. அவர்கள்தான்போராட்டத்தில் ஊடுருவி விவசாயிகளைத் தூண்டி விடுகின்றனர். இந்தப் போராட்டமானது உண்மையிலேயே விவசாய சங்கத்தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிது. ஆனால் இதில் மாவோயிஸ்ட்களின் சதி உள்ளது.

இந்த புதிய சட்டங்கள் மோசமானவை என்று சொன்னால், இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் ஏன் ஏபிஎம்சி சட்டம் அமல்படுத்தப்படவில்லை. கேரளாவில் இதற்கு முன் இருந்த காங்கிரஸ் அரசு ஏன் ஏபிஎம்சி சட்டத்தை அமல்படுத்த முன்வரவில்லை என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதில் சொல்வார்களா?

சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து மாநில அரசுகளிடமும் கலந்தாலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

37 mins ago

க்ரைம்

44 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்