பிஎஃப் வட்டியை முழுவதுமாகஒரே தவணையில் வழங்க முடிவு

By செய்திப்பிரிவு

பிஎஃப் உறுப்பினர்களுக்கான வட்டியை முழுவதுமாக ஒரே தவணையில் வழங்க மத்திய பணியாளர் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் பிஎஃப் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய வட்டியை, கரோனா பாதிப்பு நெருக்கடி காரணமாக இரு தவணைகளாக செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சகம் தெரிவித்தது.

தற்போது இபிஎஃப்ஓ நிறுவனத்துக்கு இடிஎஃப் முதலீட்டில் நல்ல வருமானம் கிடைத்துள்ளதால் பிஎஃப் வட்டியை முழுவதுமாக ஒரே தவணையில் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. இதற்கான ஒப்புதலை நிதி அமைச்சகத்திடம் பணியாளர் துறை கோரியுள்ளது.

இடிஎஃப் என்பது பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் போலவே செய்யப்படும் ஒன்றாகும். இதில் இபிஎஃப்ஓ செய்திருந்த முதலீட்டில் சிறப்பான வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிஎஃப்தாரர்களுக்கான நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டி கரோனா நெருக்கடி காரணமாக எந்த மாற்றங்களுக்கும் உட்படுத்தாமல் 8.5 சதவீதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 8.15 சதவீத வட்டியை கடன் திட்டங்களில் இருந்து ஈட்டிய வருமானத்தில் இருந்தும் 0.35 சதவீத வட்டியை பிஎஃப் முதலீட்டில் கிடைத்த வருமானத்தில் இருந்தும் வழங்கவுள்ளதாக கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

40 mins ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்