இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள், டி20 போட்டிகளுக்கானடிக்கெட்கள் விற்று தீர்ந்தன

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி , 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

ஒரு நாள் தொடர் நவம்பர் 27-ம் தேதியும், டி20 தொடர் டிசம்பர் 4-ம் தேதியும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ம் தேதியும் தொடங்குகின்றன.இந்நிலையில் ஒருநாள் போட்டி, டி20 தொடர்களுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

இதில் ஒரு நாள் போட்டி தொடரின் கடைசி இரு ஆட்டங்கள் மற்றும் டி20 தொடருக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. சிட்னி கிரிக்கெட் மைதானம் மற்றும் மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த குறுகிய வடிவிலான தொடர்களை நேரில் காண 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 27-ம் தேதி சிட்னியில் நடைபெறும் முதல் ஒரு நாள் ஆட்டத்துக்கு 1,900 டிக்கெட்டுகள் மட்டுமே மீதமிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்