எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் விரைவில் மீளும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் கணிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியப் பொருளாதாரம் விரைவிலேயே சரிவில் இருந்து மீண்டுவிடும். எதிர்பார்த்த காலத்துக்கு முன்பாகவே மீள்வதற்கான சாத்தியங்கள் தென்படத் தொடங்கியுள்ளதாக சர்வதேச பொருளாதார கணிப்பு நிறுவனமான ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.

வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான காலத்தை ரிசர்வ் வங்கி மேலும் எளிமையாக்கி உள்ளது மீட்சிக்கான முக்கியமான அறிகுறியாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் நான்காம் காலாண்டில் நாட்டின் பண வீக்கம் 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் டிசம்பரில் நடைபெற உள்ள நிதிக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் கரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. எரிபொருள் விலையைத் தவிர பெரும்பாலான பொருட்களின் விலை அனைத்துமே உயர்ந்துள்ளது. நான்காம் காலாண்டில் நாட்டின் பணவீக்கம் அதிகபட்ச அளவுக்கு உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

காய்கறி, முட்டை விலை உயர்வு காரணமாக சில்லரை பணவீக்கம் அதிகரித்து கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவாக அக்டோபரில் 7.61 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. செப்டம்பரில் இது 7.27 சதவீதமாக இருந்தது.

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பொருளாதாரம் மிகச் சிறப்பாக செயல்படுவது தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளது. மூடி’ஸ் முதலீட்டாளர் சேவை அமைப்பு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 8.9 சதவீத அளவுக்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்