தனிச் சின்னத்தில்தான் போட்டிமதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதி

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணயில் உள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் பேச்சு நடத்தினர். இரு கட்சிகளும் தலா 10 தொகுதிகள் கேட்பதால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை மதிமுக ஏற்கவில்லை. இது தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோவுடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தினர். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக ஒப்புக் கொள்ளவில்லை.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “வரும் பேரவைத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும். அதில் உறுதியாக இருக்கிறோம். அதிக இடங்களில் திமுக போட்டியிட நினைப்பது நியாயமானது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை இப்போது கூற முடியாது. உடன்பாடு ஏற்பட்டதும் தெரியவரும். 8 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

விளையாட்டு

24 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்