தென்காசி மாவட்டத்தில் முதல்வர் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமி: இன்று தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணிக்கு கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிவாசல் முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணா திரையரங்க வளாகத்தில் மகளிருடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து பிற்பகல் 12.15 மணிக்கு சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

கோவை, நீலகிரியில் ஸ்டாலின் பிரச்சாரம்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். காலை 8 மணிக்கு கோவை மாநகர கிழக்கு மாவட்டத்தில் ஜென்னி கிளப் எதிரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கோவை மாநகர மேற்கு மாவட்டம் சிங்காநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1 மணிக்கு கோவை வடக்கு மாவட்டத்தில் காரமடை அருகிலும், தொடர்ந்து நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்திலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 secs ago

இந்தியா

53 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

59 mins ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்