ஜெயலலிதா நடத்திய ஆட்சியை அடிபிறழாமல் அப்படியே நடைமுறைப்படுத்தும் முதல்வராக பழனிசாமி இருக்கிறார்

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா நடத்திய ஆட்சியை அடிபிறழாமல் அப்படியே நடைமுறைப்படுத்தும் முதல்வராக பழனிசாமி இருக்கிறார். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்கப்படும் வரியானது மத்திய அரசுக்கு செல்கிறது. இதில், காங்கிரஸ் ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் திமுக பெற்றுக் கொடுக்கவில்லை. ஒரு மருத்துவக் கல்லூரியை பெறுவதற்கே அலைய வேண்டி இருக்கும் நிலையில் தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு பெற்று கொடுத்திருக்கிறது. ஒன்றுபட்டு உழைத்து ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்.

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய கட்சி அதிமுகதான். 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. கடைசிவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியதால்தான் நாங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம்.

முதல்வர் பழனிசாமி

பயிர்க் கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே தொடர்வான். அடிப்படையில் உள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு, அவரே விலை நிர்ணயிக்க வேண்டும். மதுரையில் ரூ.2 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? இதேபோன்றுதான் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

33 mins ago

ஆன்மிகம்

1 hour ago

கல்வி

56 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்