சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா

By செய்திப்பிரிவு

‘‘எதிர்காலத்தில் இந்தியர்கள் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பார்கள்” என ஐக்கிய அரபு அமீரகத்தின் டிஜிட்டல் துறை அமைச்சர் சமீபத்தில் கூறினார். வேகமாக டிஜிட்டல் மயமாகிவரும் உலகில், இந்தியாவின் மதிப்பு விரிவடைந்து வருகிறது என்பதுதான் இதன் அர்த்தம்.

30 ஆண்டுகளாக அனைத்து தொழில்நுட்பங்களின் நுகர்வோர் என்ற முறையில் நமது மாற்றம், கட்டிடக்கலை நிபுணர் வடிவமைப்பாளர், தொழில்நுட்ப தளங்களின் உற்பத்தியாளர், தீர்வுகள், உபகரணங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் என இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் பெருமளவுக்கு வளர்ந்துள்ளன. உலகின் ஒப்பந்த சேவை வழங்கும் முதன்மை மையமாக திகழ்ந்த நிலையிலிருந்து, நமது புத்தாக்க சூழலின் வேகம் உலகமே பொறாமைப்படும் அளவிற்கு மாறியுள்ளது.

நமது இளைஞர்கள் விண்வெளி முதல் தொழில்நுட்பம் வரை, செயற்கை நுண்ணறிவு முதல் வெப்-3 வரை, இணையதளம் முதல் மின்னணுவியல்/ செமிகண்டக்டர்கள் வரை நம்பிக்கையுடன் புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்து வருகிறார்கள்.
820 மில்லியனுக்கும் அதிகமான இணையதள பயன்பாட்டாளர்களைக் கொண்ட இந்தியா, விரைவில் 1.2 பில்லியன் என்ற அளவை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிக அதிக அளவிலான இணையதள பயன்பாடு கொண்ட ஜனநாயக நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவைப் போல இணையதள பயன்பாடுகளுக்கு தணிக்கையோ, கட்டுப்பாடுகளோ இல்லாமல் இந்தியாவில் இணையதளம், அனைவரும் எளிதில் அணுகும் வகையில், இதர மேற்கத்திய ஜனநாயக நாடுகளுடன் டிஜிட்டல் கட்டமைப்பு இணைப்பை கொண்டுள்ளது.

ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு உலக கூட்டாண்மை கவுன்சிலிங் தலைமைப் பொறுப்பையும் அண்மையில் ஏற்றுள்ளது. எதிர்காலத் தொழில்நுட்பத்தை வடிமைப்பதில் இந்தியா இயல்பான வழியில் செயல்பட முடியும் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப கொள்கை மற்றும் நிர்வாகம் தொடர்பான புதிய யுகத்தில் இந்தியா தனது ஆளுமையை நிரூபிக்க வழி ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இலக்குகளும், லட்சியமும் மிகவும் தெளிவானவை.

தொழில் நுட்ப வாய்ப்புகளுக்கான தசாப்தம் என்ற வகையில், ஒரு ட்ரில்லியன் டிஜிட்டல் பொருளாதாரம் உடனடி இலக்காகும். இந்த இலக்குகளை எட்ட மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உலக டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தி, விரைவுப்படுத்தும் கொள்கை கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. வெளிப்படையான கொள்கைகள், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை, பொறுப்புடமை ஆகியவை இதன் அம்சங்களாக இருக்கும்.

தொழில்நுட்பம் என்பது கொள்கை வகுப் பதில் முக்கிய அம்சமாக உள்ளது. சுறுசுறுப்பான மற்றும் ஆற்றல்மிக்க தொழில்நுட்ப வளர்ச்சி களுக்கு அதேவேகத்துடன் தீர்வுகாணக்கூடிய நிர்வாகம் தேவைப்படுகிறது. ஆன்லைனில் நுகர்வோர் தரவு தவறாகப்பயன்படுத்துதல், பயனர்களுக்கு தீங்குவிளைவிக்கும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால், உலகெங் கிலும் உள்ள அரசுகள் வேகமாக அதிகரித்து வரும் சவால்களுக்கு விரைவாக தீர்வுகாணக் கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதில் பின்தங்கிவிட்டன. இதனால் இணையதளம் மற்றும் தொழில்நுட்ப வெளியில் குற்றச்செயல்கள், துன்புறுத்தல் மற்றும் அரசியல் தலையீடு போன்ற சவால்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த சவால்களைச் சமாளிக்க சட்டங்களால் மட்டும் முடியாது. எதிர்காலத்துக்கு தயாராகும் மாற்றங்கள் மிகவும் அவசியம். எனவே மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய முற்போக்கான அணுகுமுறையை கையாண்டு அதில் பொறுப்புடமை, பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றை ஒழுங்குமுறை சுமைகளை அதிகரிக்காமல் உறுதிசெய்ய முடிவு செய்துள்ளது.

மாறிவரும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப விரைவான அணுகுமுறையை கையாள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை, பொது மக்கள் / நுகர்வோரின் நலன்களை பாதுகாக்க வகைசெய்கிறது. அத்துடன் தரவு துஷ்பிரயோகம் இல்லை என்ற நிலையை உறுதிசெய்கிறது. மேலும் உருவெடுக்கும் புதிய சவால்களுக்கு தீர்வு காண முயற்சிக்கிறது.

தனிநபர் பாதுகாப்பு உரிமை குறித்த தீர்ப்பு 2017-ல் வெளியானது முதல் நம்பிக்கை, வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை காணும் முயற்சிகள் தொடர்கின்றன. தரவு கொள்கைகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் ஒரு சட்டத்தை, புத்தாக்கத்திற்கு தடை ஏற்படுத்தாமல் வடிவமைக்கும் பயணத்தை அரசு மேற்கொண்டுள்ளது.

நுகர்வோர் முதல் ஸ்டார்ட் அப்-கள், முதலீட்டாளர்கள் வரை சம்பந்தப்பட்ட அனைவரும் இதன் ஒவ்வொரு கட்டத்திலும் ஈடுபடுத்தப்பட்டனர். நரேந்திர மோடி அரசு நுகர்வோரிடமிருந்தும், தொழில் துறையினரிட மிருந்தும் கருத்துக்களை வரவேற்றது. அதை விரிவாக ஆய்வு செய்தது. புதிய மசோதா முழுமையான, முற்போக்கான, நவீன சட்டமாகும். அது பொதுமக்களின் தனிப்பட்ட தரவு உரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைகளை வரவேற்கிறோம்: இந்த மசோதா வகுப்பதற்கான பயணத்தின் கடைசி படியில் நாங்கள் உள்ளோம். இது பொதுமக்களின் ஆலோ சனைக்காக வெளியிடப்பட்டுள் ளது. ஆக்கப்பூர்வமான கருத்துக் கள் மற்றும் ஆலோசனைகள் வர வேற்கப்படுகின்றன. ஆலோசனை நடைமுறைகளை மேலும் விரிவு படுத்தும் வகையில், கல்வியாளர் கள், தொழில் நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து சம்பந்தப்பட்டவர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.

உலகத்தரத்துடன் கூடிய எதிர்காலத்திற்கு தயாரான சட்டங்களையும், விதிமுறைகளையும் கட்டமைக்க இணைய வழி பாதுகாப்பு திசையில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் செய்து, உத்தேச டிஜிட்டல் இந்தியா சட்டத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இளைஞர்களுக்கு மேலும் வாய்ப்புகளை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு இந்தியா மற்றும் உலகத்துக்கான எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்தை வகுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. புதிய மசோதா முழுமையான, முற்போக்கான, நவீன சட்டமாகும். அது பொதுமக்களின் தனிப்பட்ட தரவு உரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. - ராஜிவ் சந்திரசேகர் மத்திய இணையமைச்சர்மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஓடிடி களம்

26 mins ago

விளையாட்டு

33 mins ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்