ஃபேஸ்புக் மெஸஞ்சர் சேவையில் புதிய அம்சங்கள் அறிமுகம்

By ஐஏஎன்எஸ்

ஃபேஸ்புக்கின் மெஸஞ்சர் சேவையில் புதிய தோற்றம், உரையாடலுக்கான தனி வண்ணம் உள்ளிட்ட புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தனது மெஸஞ்சர் சேவையில் அவ்வப்போது புதிய அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. அப்படி சமீபத்தில் சில வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

"உலகளவில் நூறு கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கும் எங்கள் சேவையின் நோக்கம், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள பொதுவான ஒரு வழியாக இருக்க வேண்டும் என்பதுதான். தனிப்பட்ட முறையில் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்கும் வசதியை மக்கள் தேடி வரும் நிலையில் எங்கள் நோக்கம் இன்னும் முக்கியமானதாகிறது" என்று மெஸஞ்சர் பிரிவின் துணைத் தலைவர் ஸ்டான் கூறியுள்ளார்.

மேலும் செல்ஃபி ஸ்டிக்கர், வேனிஷ் மோட் (மறையும் வசதி), இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களைத் தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவையும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

கடந்த மாதம் மெஸ்ஞ்சரும், இன்ஸ்டாகிராமும் இணையும் வகையில் புதிய வசதியை ஃபேஸ்புக் அறிவித்தது. மெஸஞ்சர் செயலியிலிருந்து இன்ஸ்டாகிராம் பயனர்களைத் தொடர்பு கொள்ளும் வசதியும், அதே போல அங்கிருந்து மெஸஞ்சர் பயனர்களைத் தொடர்பு கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 secs ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்