எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்

By ஐஏஎன்எஸ்

ட்விட்டர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக ட்விட்டர் முடக்கியுள்ளது. ஒரு சில நாடுகளைத் தவிர இந்த வசதி மற்ற அனைத்து இடங்களிலும் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.

"நாங்கள் உங்கள் கணக்குகளைப் பாதுகாப்பாக வைக்க விரும்புகிறோம். எஸ்எம்எஸ் மூலம் சில பலவீனங்கள் இருப்பதைப் பார்த்துள்ளோம். எனவே, எஸ்எம்எஸ் வழியாக ட்வீட் செய்யும் வசதியை ஒரு சில நாடுகளைத் தவிர அனைத்து இடங்களிலும் முடக்கியுள்ளோம்" என ட்வீட் பகிரப்பட்டுள்ளது. அதேநேரம் லாக் இன் செய்யத் தேவையான எஸ்எம்எஸ் செய்திகளில் எந்த முடக்கமும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ட்விட்டர் தளம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே எஸ்எம்எஸ் வழியாக ட்வீட் செய்யும் வசதி இருந்து வந்தது. தற்போது இதைப் பயன்படுத்துபவர்கள் குறைவே. ஆனால், பயன்படுத்துபவர்கள் இதில் சில பிரச்சினைகள் இருப்பதாகப் புகார் தெரிவித்து வந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, சில பிரச்சினைகளாலும், பயனர்களின் கணக்குகளைப் பாதுகாக்கவும் இந்த வசதியை ட்விட்டர் தற்காலிகமாக முடக்கியது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

விளையாட்டு

3 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

45 mins ago

ஓடிடி களம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்