சாக்லெட் கம்ப்யூட்டர்

By சைபர் சிம்மன்

கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனத்தை சாக்லெட் சைஸ் சாதனம் என்றுதான் தொழில்நுட்ப உலகில் வர்ணிக்கின்றனர். இந்த குரோம்பிட் (Chromebit) சாதனம் ஒரு உடனடி கம்ப்யூட்டர். குரோம் இயங்குதளம் அடிப்படையிலான இந்த டாங்கில் சாதனம் எந்த ஒரு டிவியையோ அல்லது லேப்டாப்பையோ குரோம் பிசியாக மாற்றிவிடக் கூடியதாம்.

சாக்லெட் பார் சைசுக்கு இருக்கும் இந்தச் சாதனம் 100 டாலர் விலைக்குள் முழு கம்ப்யூட்டர் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. இதை இணைப்பதன் மூலம் எந்த டிஸ்பிளேவையும் கம்ப்யூட்டராக மாற்றலாம். ஏற்கனவே உள்ள கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பை மேம்படுத்தவும் இது உதவும்.

அசெஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சாதனம், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இந்த வகையான குட்டி கம்ப்யூட்டர்கள்தான் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த இருப்பதாக வல்லுநர்கள் அடித்துச்சொல்கின்றனர். இண்டெல் நிறுவனமும் இது போன்ற ஒரு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

புதிய நிறுவனம் ஒன்றும் கிக் ஸ்டார்ட்டரில் இதே போன்ற கம்ப்யூட்டர் சாதனத்துடன் நிதி கோரியுள்ளது. ஆக இனி பென் டிரைவ் சைசுக்கு கம்ப்யூட்டர் வருவது மட்டும் அல்ல, அதைச் சுலபமாக பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு செல்வதும் சாத்தியம்தான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

தொழில்நுட்பம்

46 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்