தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் தமிழ்ப் பாடல்கள் அடுத்த பரிணாமத்துக்கு செல்லும்: பாடலாசிரியர் மதன் கார்க்கி தகவல்

By செய்திப்பிரிவு

கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ்ப் பாடல்களை அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறினார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை கடந்த 23-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்வில் திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

இன்றைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பாடல் வரிகளை மாற்ற வேண்டியுள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தொழில்நுட்பத்தை புகுத்தும்போதுதான் மக்கள் மத்தியில் வெற்றி பெறுகிறது. தமிழ் இலக்கணத்தை கணினியில் முறைப்படுத்தும்போது இன் னும் தரமான திரைப் பாடல்களை வழங்க முடியும்.

பாடல் இடம்பெற்ற சூழல், நடை, மெட்டு, கதைப்போக்கு அனைத்திலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது தமிழ்ப் பாடல்களை அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

இதில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்