தமிழகத்துக்கு புயல் அபாயம்: தவறான தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தை இம்மாதம் 2 புயல்கள் தாக்க இருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இவ்வார இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும் வரும் 7 மற்றும் 12-ம் தேதிகளில் 2 புயல்கள் உருவாகி தமிழகத்தை தாக்க இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

2 புயல்கள் உருவாகி தமிழகத்தை தாக்க இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர் - டிசம்பர்), 88 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, தென்னிந்தியா முழுவதும் சராசரியாக வடகிழக்கு பருவமழை காலத்தில் 332.1 மிமீ மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

வாழ்வியல்

49 mins ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்