பொறையாறு பேருந்து பணிமனை கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

By செய்திப்பிரிவு

 

பொறையாறு பேருந்து பணிமனை கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம், பொறையாறில் பேருந்து பணிமனையில், ஓட்டுநர், நடத்துனர்கள் ஓய்வறையின் மேற்கூரை இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில், அங்கு படுத்து உறங்கியவர்களில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம், அரசு கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து செய்தியாளர்கள் கேள்வி குழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ''கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். உயிர் விலை மதிப்பில்லா ஒன்று. இந்நிலையில் கட்டிடம் தரம் குறைந்து கட்டப்பட்டிருந்தால், கட்டியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஏற்கெனவே இது போன்ற நிகழ்வுகள் நடந்ததை முன்மாதிரியாக கொண்டு அரசு அதிகாரிகள் எல்லா கட்டிடங்களையும் ஆய்வு செய்து ஸ்திரத்தன்மை இருந்தால், அதற்கான சான்றிதழ் அளிப்பார்கள். ஸ்திரத்தன்மை இல்லை என்று அறிந்தால் அக்கட்டிடத்தை இடிக்கவும் அரசு தயங்காது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்